Monday 3 May 2010

நித்யானந்தா: உளவு போலிஸ் அச்சம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்த் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் வீடியோவில் சிக்கிய நித்யானந்தா சாமியார், கடைசியில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடும் என்று கர்நாடகப் போலிஸ் கருதுகிறது. சாமியாரும் நடிகையும் இருக்கும் வீடியோ படங்கள், சாமியாருக்கு எதிரான குற்றச் சாட்டுகளை மெய்பிக்கத் தவறிவிடக்கூடும் என்று உளவுப் போலிஸ் வட்டாரங்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாமியார் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது. ஆனால் கைப்பற்றப் பட்டுள்ள வீடியோக்கள் சாமியாரும் நடிகையும் மனம் ஒப்பி காமத்தில் ஈடுபடுவதாகவே காட்டுகின்றன. யாராவது கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான உடலுறவு என்று சொல்லி சாமியாருக்கு எதிராக புகார் செய்தால்தான் குற்றச்சாட்டுகள் செல்லும் என்று அத்தகவல்கள் தெரிவித்தன. நடிகை ரஞ்சிதா, சாமியாருக்கு எதிராக சாட்சியம் அளிக்கவில்லை என்றால் இந்த வழக்கு ஒன்று மில்லாமல் போய்விடும் என்று போலிஸ் அஞ்சுகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தவிர சாமியார் மீது சுமத்தப்பட்டுள்ள இதர குற்றச்சாட்டுகள் எல்லாம் ஜாமினில் வெளிவரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது என்று ஒரு வட்டாரம் கூறியது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்றும் அவற்றை மெய்ப்பிக்க முடியாது என்றும் விசாரணையில் தங்களிடம் சாமியார் சொன்னதாகவும் போலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதற்கிடையே நித்யானந்தா ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அது இன்று விசாரணைக்கு வருகிறது. நித்யானந்தாவுக்கு ஜாமின் வழங்க வேண்டாம் என்று போலிஸ் கேட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கு உரிய காரணங்களைப் போலிஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முடியுமா என்பது தெரியவில்லை

0 comments: