Wednesday 5 May 2010

நிஸ்ஸான் - பஜாஜ் காருக்கு ரூ 1.1 லட்சம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பஜாஜ் - நிஸ்ஸான் கூட்டுத் தயாரிப்பாக வரும் மலிவு விலை காருக்கு வெளிச்சந்தை விலை ரூ 1.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டாடா நிறுவலனத்தின் மக்கள் கார் எனப்படும் நானோவுக்கு நேரடியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் நிஸ்ஸான் நிறுவனமும் பஜாஜ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் மலிவு விலைக் கார் விற்பனைக்கு வருகிறது. இந்தக் காரின் விலை தோராயமாக ரூ 1.35 லட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது இறுதியான விலையை அறிவித்துள்ளார் நிஸ்ஸான் - ரினால்ட் நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோஸ். இந்தக் காரின் விலை 2500 டாலர் அதாவது ரூ 1.1 லட்சம் மட்டுமே. இதில் மாற்றமிருக்காது என்று அவர் நேற்று அறிவித்தார். இதனை பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜும் உறுதிப்படுத்தினார். தற்போது நானோவின் விலை ரூ.1.23 லட்சம் முதல் 1.72 லட்சமாக (டெல்லி யில் எக்ஸ் - ஷோரூம் விலை) உள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் டாடா நானோ விலை உயரும் என்று கூறப்படும் நிலையில், ரூ 1.1 லட்சத்துக்கு நிஸ்ஸான் நிறுவனம் கார் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இதனால் டாடா நானோ பெரும் நெருக்கடியைச் சந்திக்க உள்ளது. நானோவைப் போலல்லாமல், நிஸ்ஸானின் கார் முன்பக்க எஞ்ஜினுடன், அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக தயாராகிறது.

0 comments: