Thursday 20 May 2010

12 ஆம் வகுப்புத் தேர்வில் 914 பெற்ற பிச்சைக்காரர் மகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிளஸ் 2 தேர்வில் 914 மதிப்பெண்கள் பெற்ற பிச்சைக்காரின் மகளுக்கு அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் சீட்டும், குடிசை மாற்று வாரியத்தில் வீடும் ஒதுக்கி மதுரை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாணவிக்கு உதவிகளும் குவிகின்றன. சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் குமார். 2005&ம் ஆண்டு கட்டுமான தொழிலில் ஈடுபட்டபோது விபத்தில் இரு கால்களையும் இழந்தார். இதையடுத்து இவரின் 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு குமாரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு வந்த குமார், சவுராஷ்டிராபுரம் தெற்கு தெருவில் தங்கினார். வேலை கிடைக்காததால் அண்ணாநகர் ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகே மூன்று சக்கர சைக்கிளில் அமர்ந்து பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். அதில் கிடைத்த பணத்தை கொண்டு தனது மூத்த மகள் மீனாவை மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மீனா 914 மதிப்பெண் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். குமாரின் 2&வது மகள் 10ம் வகுப்பும், மகன் 4&வது வகுப்பும் படிக்கின்றனர். குமாரின் நிலை குறித்து அறிந்த மதுரை கலெக்டர் காமராஜ், அவரையும் மீனாவையும் நேற்று நேரில் அழைத்து விசாரித்தார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் மீனா சேர்ந்து படிப்பதற்கான நடவடிக்கை எடுத்தார். வடமலையான் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் மீனாவின் இரண்டு ஆண்டு படிப்பு செலவுக்கான நிதி வழங்கப்பட்டது. அதை மீனாவிடம் கலெக்டர் வழங்கினார். குமாருக்கு குடிசைமாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கவும், ரேஷன் கார்டு வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். உங்கள் கருத்தை பின்னோட்டத்தில் தெரிவியுங்கள்

0 comments: