Thursday 20 May 2010

மனைவி கறுப்பு - கணவன் வெறுப்பு - கழுத்து நெரிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மனைவி அழகாக இல்லை என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய நபரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, மத்குகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் முத்தம்மா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முத்தம்மா கறுப்பாக இருந்ததால் கோவிந்தராஜுவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், பெற்றோரின் பேச்சை தட்ட முடியாமல் திருமணம் செய்தார். முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மாபின் பொங்கி எழுந்தார். நான் அழகாக இல்லையென்றால் எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்? என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இருவரும் ஹூப்ளி அருகில் வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள் வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள் என்றார். வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

1 comments:

Anonymous said...

இதுல உங்களுக்கு எதுகை மோனை கேக்குதா நீங்க பொய் போக்கிரி படம் பாருங்க நெப்போலியன் பேச்சை கேளுங்க by Tamilnewsupdates Team