இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கேப்டன் டி.வி.யில் செய்திகள், படங்கள், தொடர்கள், ஒளிபரப்பப்படுகின்றன. நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கேப்டன் டி.வி. என்ற பெயரில் புதிய டெலிவிஷன் சேனல் துவங்கியுள்ளார். இதன் சோதனை ஒளிபரப்பு நேற்று முதல் தொடங்கியது. வருகிற 14-ந்தேதி கேப்டன் டி.வி. ஒளிபரப்பின் துவக்க விழா சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கேப்டன் டி.வி அலுவலகத்தில் நடக்கிறது.
விஜயகாந்த் இதில் பங்கேற்று டி.வி. சேனலை தொடங்கி வைக்கிறார். அவரது மனைவி பிரேமலதா குத்து விளக்கேற்றி டி.வி. நிகழ்ச்சிகளை துவக்குகிறார். கேப்டன் டி.வி. நிர்வாக இயக்குனர் எல்.கே. சுதீஷ் விழாவில் பங்கேற்று தொலைகாட்சியின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றி தொகுப்புரை நிகழ்த்துகிறார்.
கேப்டன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து எல்.கே. சுதீஷ் கூறியதாவது:-
ஆசிய கண்டம் முழுவதும் கேப்டன் டி.வி.யில் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். விரைவில் ஐரோப்பா கண்டத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தெரியத் தொடங்கும்.
வரும் மே 1-ந்தேதி முதல் செய்திகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. தினமும் 4 முறை ஒளிபரப்பாகும் செய்திகளை பொறுத்தவரையில் தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா வற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
எங்கள் சேனலில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகும்.
காலையில் அனைத்து மத பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தொடர்ந்து பெண்களுக்காக அவர்கள் ரசிக்கும் விதத்தில் மெகா தொடர்களும், சினிமா ரசிகர்களுக்காக திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.
அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் முதல் 24 மணி நேர செய்திச் சேனலும் தொடங்கப்படும்.
இவ்வாறு எல்.கே. சுதீஷ் கூறினார்.
0 comments:
Post a Comment