Thursday, 1 April 2010

ஏப்ரல் 1 முட்டாள் தினமா ? முட்டாள் ஆக்குகின்ற தினமா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1ம் தேதி முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் துவக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன. ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர். அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படும் உண்டு. ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள கூறுகின்றனர். தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள். அதோடு பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகள் போன்றவையும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி பொய் செய்திகளை வெளியிடுவதுண்டு. முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. 'மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்' என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர்

2 comments:

said...

நல்ல பகிர்வு. உங்கள் கேள்விக்கு என் இன்றைய இடுகையை பாருங்கள். முட்டாள் தினமா ? முட்டாளாக்கப் படும் தினமா? என்பது புரியும். வாழ்த்துக்கள்

said...

இதில் இருந்து என்ன தெரிகிறது முட்டாள் ஆக்குகின்ற தினமா? இல்லை முட்டாள்கள் முட்டாளாக இருக்கின்ற தினமா சொல்லுங்களேன்