இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்கப் பாதிரியார் லாரன்ஸ் மர்பி என்பவர் காது கேளாத 200 சிறார்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தப் பாதிரியார் 1950-ம் ஆண்டுக்கும் 1974-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள காது கேளாத மாணவர்கள் பயிலும் செயின்ட் ஜான் பள்ளியைச் சேர்ந்த 200 பேரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தப் பாதிரியார் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் பாதிரியார் லாரன்ஸ் மர்பியிடம் தானும் பாலியல் சித்ரவதைக்கு
ஆளானதாக அமெரிக்கர் ஒருவர் புகார் கூறியுள்ளார். பாதிரியார் லாரன்ஸ் மர்பி மீதான இத்தகைய புகார்கள் பற்றி கத்தோலிக்க மத குருவான போப் 16-வது பெனடிக்டிற்கு தெரியும் என்றும் ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த அமெரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.
போப் 16-வது பெனடிக்ட் மீது அந்த அமெரிக்கர் கூறும் புகாரை வத்திகன் மறுத்துள்ளது.
சில நாடுகளில் பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளது இப்போது சமூகத்தின் பார்வைக்கு தெரிய வந்துள்ளது.

0 comments:
Post a Comment