இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் சோதனையிட்ட வண்ணம் உள்ளனர். இந்த சோதனையின் போது,போலி மருந்துகளும் விற்கப்படுவதை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்வதோடு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூரில் போலி மருந்து விற்றதாக வள்ளியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சின்னப்பிள்ளையார் மேடு பகுதியைச் சேர்ந்த பழனி (வயது 40) என்பவர் போலி மருந்துகளை சப்ளை செய்வதாக தெரிவித்தாராம். இதனையடுத்து கடலூர் மாவட்ட டெல்டா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அமீர் ஜான் தலைமையில் போலீசார் சின்னப்பிள்ளையார் மேடு பகுதியில் உள்ள பழனியின் வீட்டை இன்று காலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, போலியாக தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் மருந்து 60 ஆயிரம் பாட்டீல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து டெல்டா போலீசார் அங்கிருந்த 60 ஆயிரம் பாட்டீல் போலி மருந்து அடங்கிய அட்டை பெட்டிகளை இரண்டு லாரிகளில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, போலி மருந்துகளை சப்ளை செய்ததாக பழனியை கைது செய்த போலீசார் அவரிடம் போலி மருந்துகள் எங்கிருந்து தயாரித்து யார் மூலம் கடலூருக்கு வருகிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, 2 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment