இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலத்திட்டங்களின் மகத்துவத்திற்கு மக்களால் அணிவிக்கப்பட்ட பொன் ஆரம், பென்னாகரம் இடைத்தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான வெற்றி.
மத்திய அரசின் தேசிய ஆலோசனைக் குழுத்தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசும், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைவர் முதல்- அமைச்சர் டாக்டர் கலைஞரின் தலைமையிலான தமிழக அரசும் இணக்கமாக செயல்பட்டு நடைமுறைப்படுத்தி வரும் நாட்டு நலப்பணிகளுக்கு மக்கள் கடந்த 6 ஆண்டு களாக தொடர்ந்து உற்ற உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் முன்பு நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து நியாயமாக நடந்த வாக்குப்பதிவு என்று எதிர்க்கட்சியினரும் மனதார ஏற்று வரவேற்று பாராட்டுகிற வகையில் அமைதியோடு முடிவுற்ற பென்னாகரம் இடைத்தேர்தலிலும் மக்கள் தங்களது தெளிவான தீர்ப்பை மீண்டும் வழங்கியிருக்கிறார்கள்.
நாட்டுப்பணிக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நாள்தோறும் உழைத்து வரும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ், தமிழர், தமிழ்நாடு உயர்வுக்கென்று கண் துஞ்சாது ஈடுஇணையற்ற கடும் பணி ஏற்று செயல்படும் முதல்- அமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகிய தலைவர்களுக்கு ஊக்கம் தரும் வண்ணம் பென்னாகரத்தில் வெற்றி தந்த பெருமக்களுக்கும், நன்றியையும், வெற்றி பெற்ற இன்பசேகரனுக்கு வாழ்த்தையும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, நெறிகளோடு சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தேசிய முஸ்லிம் லீக், புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment