Tuesday, 30 March 2010

சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் லீலை புகார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் மோசடி புகார் எழுந்துள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வீடியோவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தா. தற்போது இருவரும் தலைமறைவாகி விட்டனர். வீடியோக்கள் மூலம் அவ்வப்போது பேசி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீதான வழக்குகளை கர்நாடக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் தாண்டி அமெரிககாவிலும் நித்தியானந்தா மீது செக்ஸ் லீலை புகார் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் என்ற முன்னாள் சீடர், அம்மாகாண அட்டர்னி ஜெனரல் ஜெர்ரி பிரவுனிடம் இதுதொடர்பான புகாரை அளித்துள்ளார். அந்த அமெரிக்கருக்கு நித்தியானந்தா வைத்த பெயர் சுவாமி நித்ய பிரபா என்பதாகும். அவர் தனது மனுவில், அமெரிக்காவில் பல இடங்களில் நித்யானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அங்கு வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார். ஒருமுறை, கலிபோர்னியா மாகாணம் நார்வாக் பகுதியில் உள்ள சனாதன் தர்மா கோவிலில் 2 நாட்கள் பயிற்சி முகாமுக்கு நித்யானந்தா வந்திருந்தார். வெளியில் காவலுக்கு நிற்க வைத்தார்... அப்போது, அவரை தனியறையில் ஒரு பெண் சந்தித்தார். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார். மேலும், இந்து மத நம்பிக்கைகளை நித்யானந்தா தவறாக பயன்படுத்தினார். ஆசிரமத்தில் இருப்பவர்களை அவர் அடிக்கவும் செய்வார். எனது வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சம் டாலர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு வார கால தியான பயிற்சிக்காக தங்கி இருந்தேன். அந்த தியான வகுப்பின்போது, நான் மயக்க நிலையில் இருந்தேன். ஏதோ மருந்து காரணமாக, நான் உணர்வை இழந்தது போல இருந்தது. அந்த தியான வகுப்பின்போது, நித்யானந்தா, யாகம் வளர்த்தார். பக்தர்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை வெட்டி, தீயில் போடுமாறு சொன்னார். மேலும், அவர் அந்த தீயில் கஞ்சா விதை போல தோன்றிய ஏதோ ஒன்றை போட்டார் என்று கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்கர் ஒருவர், நித்தியானந்தா மீது செக்ஸ் புகார் அளித்துள்ளார்.

0 comments: