இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மணக்கவுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் மாதம் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. தனது குடும்ப நண்பரின் பிள்ளையான ஹைதராபாத்தைச் சேர்ந்த சோரப் மிர்ஸாவைத்தான் சானியா மணப்பதாக இருந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக சானியாவின் தந்தை அறிவித்தார். இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அதற்குக் காரணம் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை சோயப் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ள தகவலில், உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. நான் சானியாவை மணக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைதான். கடவுள் அருளால், ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம்.
சானியா ஒரு சர்வதேச விளையாட்டு வீராங்கனை. எனவே அதன் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். அவர் தனது துறையில் சிறந்து விளங்க நான் உறுதுணையாக இருப்பேன்.
2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அவர் இந்தியா சார்பாக விளையாட வேண்டியது அவசியமாகும், முக்கியமானதாகும். அவர் இந்தியாவுக்காக பதக்கம் வென்றால், ஒரு கணவராக நான் மிகவும் பெருமைப்படுவேன் என்று கூறியுள்ளார் சோயப் மாலிக்.
திருமணத்திற்குப் பின்னர் சானியாவும், சோயப் மாலிக்கும் துபாயில் வசிக்கவுள்ளதாக சானியாவின் தந்தை இம்ரான் மிர்ஸா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். சோயப் துபாயில்தான் தற்போது வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 30 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment