Monday, 15 March 2010

பினாங்கில் ஓரின பாலியல் சேவை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையின் போது பல சுகாதார மையங்களும் உடற்கட்டு பராமரிப்பு நிலையங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தகைய தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாக டத்தோ வீரா குறிப்பிட்டார். இது மாதிரியான மையங்களுக்கு உள்ளாட்சி மன்றங்கள் அனுமதி வழங்க வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டும் அவர்கள் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இதனால் இந்த மையங்களின் உரிமையாளர்கள் தாதாக்களைபோல தங்களை எண்ணிக்கொண்டு சட்டத்தை மதிக்காமல் நடக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். உள்ளாட்சி மன்ற அலுவலகங்களின் மெத்தனப் போக்கினால் பெட்டர்ஸ் பார்க், புலாவ் டிக்கூஸ், பாகான் ஜெர்மல், செபராங் ஜெயா பகுதிகளில் ஓரின பாலியல் தொழில் பெருகி விட்டது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: