Tuesday, 16 March 2010

சுட்டெரிக்கும் வெயில் தொடங்கியது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் 100 டிகிரியை தொட்டது. சேலத்தில் 2 நாட்களாக 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது. கடந்த கால வெயில் அளவுகளை ஒப்பிட்டால், 2004 மற்றும் 2009ம் ஆண்டு மார்ச் மாதங்களில் 97.2 பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 100 டிகிரியை தொட்டுவிட்டது. இதனால், மார்ச் 2 வது வாரத்தில் இருந்தே கடும் வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. நேற்று முன்தினம் சேலத்தில் 100 டிகிரி வெயில் நிலவியது. திருச்சி, திருத்தணி 99 டிகிரி, பாளையங்கோட்டை, மதுரை 97 டிகிரி வெயில் நிலவியது. நேற்றும் அதே போல சேலத்தில் 100 டிகிரி வெயில் நிலவியது. சென்னை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 91 டிகிரி வெயில் நிலவியது.

0 comments: