Saturday, 27 March 2010

ரஹ்மானின் 'உலகப் பயணம்' அமெரிக்காவிலிருந்து ஆரம்பம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக உலக இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். The Journey home world tour என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் ஐரோப்பா, ஆப்ரிக்காவின் உள்ளார்ந்த பிரதேசங்களில் முதன்முதலாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். ஜுன் 11-ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஆரம்பமாகும் இந்தப் பயணம், 5 மாதங்களுக்கும் மேல் 20 நாடுகளில் தொடரவுள்ளதாம். இந்த இசைப் பயணத்துக்கான ஏற்பாடுகளை ரப்போர்ட் புரொடக்ஷன்ஸ் தீபக் கட்டானி செய்து வருகிறார். புதிய தொழில்நுட்பங்களுடன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இசை நிகழ்ச்சியின்போது, உலக புகழ்பெற்ற நடன கலைஞர்களின் நடனங்களும் இடம்பெறுகின்றன. ரஹ்மானுடன் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலும் இசை நிகழ்ச்சி 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும். ரஹ்மான் இசையில் உருவான அனைத்து மொழி திரைப்பாடல்கள், ஆல்பங்கள் இதில் பாடப்படும்.

0 comments: