Friday, 26 March 2010

ஜெயா மீது கருணாநிதி கடும் தாக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவை, அடுத்த தேர்தலில் பூஜ்ஜியமாக ஆக்கும் வகையில் பென்னாகர இடைத் தேர்தலில் வியூகத்தைக் களம் இறக்கினார் திமுக தலைவர் திரு கருணாநிதி. அரசியல்வாதிகளிலேயே அறவே மரியாதை இல்லாதவர் ஜெயலலிதா என்ற ஓர் எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவது அவருடைய இலக்கு என்று தெரிந்தது. அதிமுகவுக்கு எதிர் காலத்திலே வைப்புத் தொகையைப் பெறும் இடத்திற்கு வருமா என்ற அளவிற்குத்தான் கவலைப் படுவதாக அவர் சொன்னார். தம்மை அவமானப் படுத்துகிற ஒரே தலைவர் ஜெயலலிதா என்று வர்ணித்த முதல்வர், “மற்றவர்களை மதிக்க மறுப்பது, தவறுவது இவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது என்பதை நீங்கள் இன்று அல்ல, நாளை அல்ல; வெகு விரைவிலே காணத்தான் போகிறீர்கள்,” என்று சாபம் விடுத்தார். உலகமே வியந்து பாராட்டும் தமிழ்நாட்டின் புதிய சட்டமன்றக் கட்டடத்தில் நடந்த முதல் சட்டமன்றக் கூட்டத்துக்கு அதிமுக எம்எல்ஏக்களை கருப்புச் சட்டையுடன் வரச் செய்து, வெளிநடப்பு செய்ய வைத்து அவமானப்படுத்திய தும் ஜெயலலிதாவே என்றார் திரு கருணாநிதி. அண்மைய காலமாக இடைத்தேர்தல் தொகுதிகளை எட்டிப் பார்க்காத முதல்வர், இப்போது பென்னாகரம் தொகுதிக்கே சென்று அங்கு லட்சம் பேருக்கும் அதிக கூடடத்தினரிடையே அதிமுக தலைவியைக் குறைகூறினார். “இப்போதுள்ள தோராயக் கருத்து கணிப்பின்படி பென்னாகரத்தில் திமுகவுக்கு முதலிடமும், பாமகவுக்கு 2-ம் இடமும் அ.தி.மு.க.வுக்கு 3-வது இடமும் தரப்பட்டு உள்ளதாக கேள்விப்பட்டேன். “இதற்காக உள்ளபடியே வருத்தப்படுகிறேன். “ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படுகிறது என்றால் எதிர்காலத்திலே தேர்தலில் வைப்புத்தொகையை வாங்குகின்ற இடத்திற்கு வருமா என்ற அளவிற்கு நான் கவலைப்படுகிறேன்,” என்று திரு கருணாநிதி கூறினார். என்றாலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்துவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

0 comments: