Sunday 21 March 2010

எச்சரிக்கை போலி மருந்துகள் விற்பனை உஷார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடந்த சில நாட்களாக பழைய மாத்திரகள், மருந்துகள் விற்பனை செய்யபடுவதாக புகார் பெரம்பூரில் உள்ள மருந்து கட்டுபாடு இயக்குனருக்கு வந்த வன்னம் இருந்தது, இது குறித்து இயக்குனர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது விசாரனை மேற்கொண்ட காவல் துறையினர் கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த ரவி,சுனிதா ராணி ஆகியோர்களை பிடித்து விசாரனை செய்தனர், அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியிட்டனர், வடசென்னை பகுதியில் சேரும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக் கிடங்குக்கு லாரி மற்றும் வேன்களில் கொண்டு வரப்படும் மாத்திரை பருந்துகள் கொட்டப்படும் அதை இவர்கள் காலாவதியான மருந்து மாத்திரைகளை நாங்கள் விலைக்கு வாங்கி, கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து கடைகளில் கொடுத்து விடுவோம். அங்கு வைத்து தான் காலாவதியான மருந்து மாத்திரைகள், புதிய மாத்திரைகளாக உருவாக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சி யூட்டும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் கோயம்பேட்டில் உள்ள மருந்து குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகள் பெட்டி-பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம். இதுதொடர்பாக சுனிதா ராணி (வயது 29), கிருபாகரன் (30), ராமகிருஷ்ணன் (35), விஜயகுமார் (34), கோவிந்தன் (29), ஜெகதம்மா (30), தர்மராஜன் (50) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனிதாராணி தவிர மற்ற அனைவரும் மருந்து குடோனில் பணி புரிந்தவர்கள். மீனா ஹெல்த்கேர் மருந்து குடோனின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் தலை மறைவாக உள்ளார். காலாவதியான மருந்து களை விற்ற வழக்கில், மேலும் 5 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலைவிரித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்கள் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். காலாவதியான மருந்துகளை விற்று மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக புளியந் தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது:- காலாவதியான மருந்துகள் கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்துதான் காலா வதியான மருந்து மாத்திரைகளின் ரேப்பரில் உள்ள சீல் அழிக்கப்படுகிறது. அதில் இருக்கும் உற்பத்தியான தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கெமிக்கல் வைத்து அழித்து விடுகின்றனர். பின்னர் தேதியை மாற்றி சீல் செய்து புதிய மருந்துகள் போல மருந்து கடைகளில் விற்பனை செய்துள்ளனர். பெரிய நெட்வொர்க் அமைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளோம். தலை மறைவாக உள்ளவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கோயம்பேட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த காலாவதியான மருந்துகள் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய மோசடி கும்பலுடன் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருந்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து இதற்கான வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த விசாரணை முடிவில் மோசடி தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசடியில் ராஜஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் இந்தியா முழுவதும் இதுபோன்று காலாவதியான மருந்துகளை சப்ளை செய்து வருகிறார். அவரை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர். பொது மக்கள் மருந்து மாத்திரைகள் வாங்கும் போது பில் மற்றும் தேதி வருடம் தவறாமல் பார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எச்சரிக்கை போலி மருந்துகள் விற்பனை உஷார்

1 comments:

said...

மனித உயிர்களோடு விளையாடும் இந்த மாதிரி கேவலமான பிழைப்பு செய்பவர்கள் தெரிந்து தானே செய்கிறார்கள்.

இப்போ நாம் வாங்கும் மருந்து இந்த வகையராவானு எப்படி தெரிந்து கொள்வது?


http://wwww.virutcham.com