Saturday 20 March 2010

சன் டி.விக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. சன் டிவியில் இதுதொடர்பான காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாகை மாவட்டம் திருவிளையாட்டத்தை சேர்ந்த வக்கீல் சாரதி என்பவர் மயிலாடுதுறை நீதித்துறை 2வது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து மாஜிஸ்திரேட் சொர்ணகுமார் அளித்த தீர்ப்பு:

பிரபலமான நபர் தகாத செயலில் ஈடுபட்டுள்ளார் என செய்தி வெளியிடும்போது அது தொடர்புடைய காட்சிகள் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வழக்கிலும் சில காட்சிகள் சில நிமிட நேரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் செய்தியின் சாராம்சத்துக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த காட்சிகளில் ஆபாசம் இல்லை.

மேலும் அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மத்தியில் மட்டரகமான ஆபாச எண்ணத்தை ஏற்படுத்தும் இயல்பில் இல்லை. மாறாக செய்தியில் சொல்லப்பட்ட நபரை பற்றி கீழ்த்தரமான எண்ணத்தை உண்டாக்கக்கூடியதாகத்தான் உள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஷரத்து 19(1)(எ)&வின் கீழ் பத்திரிகைகளுக்கு கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திரத்தை சில கட்டுப்பாடுகளுக்குள் அனுபவித்து கொள்ளலாம். அந்த சுதந்திரத்தை தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து தடுக்க இயலாது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292&ன் கீழ், பார்ப்பவர்களின் ஒழுங்கை கெடுக்கும் அல்லது அவர்களை நெறிபிறளச் செய்யும் வகையில் இருக்கும் காட்சிகள்தான் ஆபாசம் என கொள்ளப்படும். ஆனால் இந்த வழக்கில் வெளியிடப்பட்ட படங்கள் தவறு செய்த நபரை கண்டிக்கும் விதமாகவும், அவர் செய்த தவறை நாட்டுக்கு தெரிவிக்கும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவுமே உள்ளது.

எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292&ன் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு வழக்கு எதுவும் எழவில்லை. இதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதேபோன்ற வழக்கில் 1986&ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பை பின்பற்றி இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

0 comments: