இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
போலி மற்றும் காலாவதி மருந்துகள் விற்பதை தடுப்பது பற்றிய ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் ஸ்ரீபதி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்புராஜ், போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன், சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன், மருத்துவ கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘மருந்து கட்டுப்பாட்டுத் துறையை வலுவுள்ளதாக்க தரம் உயர்த்த வேண்டும். மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக வெளியிட வேண்டும். போலி மற்றும் காலாவதி மருந்துகளை விற்பது போன்ற குற்றங்களில் நேரடியாக ஈடுபடுபவர்கள், மூளையாக செயல்படுபவர்கள், வெளி மாநிலங்களிலிருந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்ளை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்வதோடு, காலாவதியான மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருந்து கடைகளில் காவல் துறையினர், மருத்துவத் துறையினர் கூட்டு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்புராஜ் கூறுகையில், “போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் பற்றிய புகார்களை ஹெல்ப்லைனிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்” என்றார்.
போலி மருந்துகள், காலாவதியான மருந்துகளை விற்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
Tuesday, 23 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment