Friday, 19 March 2010

புதிய சட்ட சபையும் , 2010 -11 தமிழக பட்ஜெட்டும், எதிர்கட்சிகள் வெளிநடப்பும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக அரசின் 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதிய சட்டசபை வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் க. அன்பழகன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார் ,காலை 9.30 சட்டசபை கூட்டம் தொடங்கியது எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா சட்டசபைக்கு வரவில்லை,அ.தி.மு.ம, எம்,எல்,ஏக்கள் பலர் வந்து இருந்தனர், அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர், சட்டமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை இரண்டு முறை முதல்- அமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஜெயலலிதாவுக்கு முறையாக அனுப்பி வைக்காமல் ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிற இந்த ஆட்சியை கண்டித்தும் நாங்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். என்று கூறி வெளிநடப்பு செய்தனர், பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: - * திமுக அரசு சமூக நீதி, தமிழக மக்களின் மேம்பாடு ஆகியனவற்றை கருத்தில் கெhண்டு இந்த பட்ஜெட்டை தயார் செய்துள்ளதாக தெரிவித்தார். வேளாண் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் அரசு இந்த நிதி ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர் கடன் 2500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். * கரும்பு கொள்முதல் விலை கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550-லிருந்து ரூ. 1650 ஆக உயர்வு. கரும்புக்கு டன் ஒன்றுக்கு கூடுதலாக ரூ. 100 அளிக்கப்படயிருப்பதாக நிதி அமைச்சர் அன்பழகன் அறிவித்தார். போக்குவரத்து செலவையும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2000 ஊக்கத் தொகையாக அளிக்கபடும் * சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் * நெல்லுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண ரக நெல்லின் கொள்முதல் விலை குவின்டாலுக்கு ரூ.1050ஆகவும், சன்ன ரக நெல்லின் விலை குவின்டாலுக்கு ரூ. ஆயிரத்து நூறாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. * இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு ரூ.295 மானியம் கோடி ஒதுக்கீடு * இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசுகள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விவசாய நிலங்களில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு அளிக்கப்படும். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை உரம் பயன்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு தரச்சான்றிதழ் அளிக்கப்படும். * விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு. * சோற்றுக்கற்றாழையில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு. * பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு. * காவிரி ஆற்றில் கதவணை அமைக்க ரூ.103 கோடி ஒதுக்கீடு * தமிழக ஆறுகளில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி. * நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு * ஏரிகளைப் சீரமைக்க ரூ.439 கோடி * முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை. முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்தார். * வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. * சேது சமுத்திர திட்டப் பணிகளை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல் * கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு * வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு. * பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் சீரமைக்க ரூ.127.5 கோடி ஒதுக்கீடு. * தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு * உணவு மானியத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு * இலங்கை தமிழர் நலனுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு. இலங்கை அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. * காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2962 கோடி ஒதுக்கீடு. * ரூ. 120 கோடி நிதியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் * 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். * மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்படும். * அரசுக் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து. * வர்த்தகச் சின்னம் இடப்பட்ட காபித்தூளுக்கு வரிக் குறைப்பு * பெயிண்ட் பிரஷுக்கு வரிக் குறைப்பு * சென்னை வெளிவட்டச் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும். * கோவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கு வெளிவட்டச் சாலை ரூ. 284 கோடி செலவில் 4 வழிச் சாலையாக 26 கி.மீ.தூரத்துக்கு பொதுத்துறை சார்பில் அமைக்கப்படும். * பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு மட்டும் 10 ஆயிரத்து 148 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வரும் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 2000 நடுநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் வசதி ஏற்படுத்த ரூ. 56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். * படிக்கும் பாரதம் என்ற திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி கல்வியறிவு பெற்ற பெண்களின் விழுக்காடு குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கல்வி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு சார்பில் 68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் விழுப்புரம், பெரம்பலூர், சேலம் , ஈரோடு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. * கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும். * கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும் கோவை தொழில்நுட்ப பூங்கா மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும். * புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும். * திருவண்ணாமலையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். * மேலும் புதிதாக 36 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். * மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து வரி விலக்கு: * மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு. * திடக்கழிவு பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் எரிபொருளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. * மனநோயாளிகளைப் பராமரிக்கும் மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி. * இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஒராண்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. * உணவுப் பெhடி தயாரிக்க பயன்படும் சீரகம், சோம்பு போன்ற மூலப் பெதருட்களுக்கு வரி விலக்கு. * சோற்று கற்றாலை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. * வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு, கார வகைகளுக்கும், காபித் தூளுக்கும் வரி குறைப்பு. * பெயின்ட பிரஷ்சுக்கான வரி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. * தையல் ஊசி, பட்டன், கத்தரிக்கோல் ஆகிய பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. * வரி நிலுவைகளை தீர்வு செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும். * வரும் கல்வி ஆண்டிலிருந்து அரசு கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்.சி. போன்ற முதுகலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. * சேது சமுத்திர திட்டம் மீதான தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. * மாற்றுத் திறனுடையோருக்கென தனித்துறை முதல்வர் கருணாநிதி தலைமையில் செயல்படும். * சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். * மத்திய அரசு உதவியுடன் 7 புதிய பாலிக்டெக்னிக் அமைக்கப்படுகிறது. * பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க உதவி செய்வதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு * தேனியில் ரூ. 10 கோடி செலவில் சிறப்பு மனநலை மருத்துவமனை அமைக்கப்படும். * தியாகி வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணி மண்டபம். * விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணி மண்டபம். * விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நெல்லையில் மணி மண்டபம். * மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்காக மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். * கர்ப்பிணி பெண்களுக்கு ரேஷன் கடையில் இலவச அயோடின் கலந்து உப்பு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. * ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண நிதி தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * அனைத்து ஊராட்சிகளிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அன்பழகன் , ராஜ்யசபாவில் பெண்கள் இட ஒதுக்கீடு மசேததா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழக சட்டசபையில் பெண்கள் மசோதாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். * தமிழகத்தில் வரும் நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூ. 124 கோடி ஒதுக்கீடு. * வரும் நிதியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிப்பை தமிழில் மேற்கொள்ள பட்ஜெட்டில், வசதி செய்யப்பட்டுள்ளது. * கோவையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் * திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழில் தலைப்பிடும் சினிமாக்களுக்கு தொடர்ந்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும். * எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். * மதுரை திருப்பரங்குன்றத்தில் ரூ. 4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். * பட்ஜெட்டில் அரவாணிகள் நலனுக்காக மேலும் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு * 2010 -11 நிதிநிலை மதிப்பீடு மொத்த வருவாய் - ரூ. 63,091.74 கோடி மொத்தச் செலவு - ரூ. 66,488.19 கோடி பற்றாக்குறை - ரூ. 3,396.45 கோடி

0 comments: