Wednesday, 17 March 2010

காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட்வீச்சு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை. இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர். ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார். அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார். பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார். இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர். இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: