இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
போலி ஆவணம் தயாரித்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரிசியை தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி துறைமுகம் வழியாக அரிசி கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குஜராத் வழியாக துபாய்க்கு அனுப்புவதற்காக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த 8ம் தேதி வந்த 12 கன்டெய்னர்களை சுங்க இலாகா கமிஷனர் நேற்று சோதனையிட்டார். அப்போது, அதற்குரிய ஆவணங்களில் சாத்தூரை சேர்ந்த டிஎம்பி பீட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் குஜராத் மாநிலம் பாவுலா என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து, சவுதி அரேபியா செல்ல இருப்பதாகவும், அந்த கன்டெய்னருக்குள் சோளம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 10 கன்டெய்னர்களில் புழுங்கல் அரியும், 2 கண்டெய்னர்களில் பச்சை அரிசியும் என மொத்தம் 290 டன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குத்தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கமிஷனர் ராஜன் கூறியதாவது: போலியான ஆவணங்களை தயார் செய்து, தவறான சான்றுகள் அளித்து சோளம் என்ற பெயரில் கடத்த இருந்த அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் சாத்தூரில் இயங்கி வருவதாக கூறப்படும் நிறுவனம் போலியானது என்பது தெரியவந்தது. குஜராத்தில் இதே பெயரில் நிறுவனம் உள்ளதா என்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை உதவியுடன் விசாரணை நடத்த உள்ளோம். இதில் ஏற்றுமதி முகவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
0 comments:
Post a Comment