Friday, 5 February 2010

அழ‌கி‌ரியுட‌ன் அ.‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ. ராதா‌கிரு‌ஷ்ண‌ன் ச‌ந்‌தி‌ப்பு:கட்சி நடவடிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கோவில்பட்டி தொகுதி அ.இ.அ.தி.மு.க ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராதாகிருஷ்ணன் இன்று மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இன்று காலை மதுரையில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டிற்கு சென்ற அ.தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறு‌‌ப்‌‌பினராக இரு‌க்கு‌ம் ராதாகிருஷ்ணன் அழகிரிக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அழகிரி வீட்டை விட்டு வெளியே வந்த ராதாகிருஷ்ணன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசும் போது,'எனது தொகுதி பிரச்சனைகள் குறித்து சொல்வதற்காகவே மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்தேன். கோவில்பட்டி தொகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அடிப்படை வசதிகள் இல்லை. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர் அழகிரி சிறப்பாக பாடுபட்டு வருவதால் அவரிடம் கூறினால் நல்லது நடக்கும் என்ற அடிப்படையில் மத்திய அமைச்சரை சந்தித்து எனது தொகுதிக்கு இந்த வசதிகளையெல்லாம் செய்து தர முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையை பரிவுடன் கேட்ட மத்திய அமைச்சர் அழகிரி, இந்த மனு உடனடியாக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வேன் என்று கூறினார். இந்த கோரிக்கைகளை சட்ட மன்றத்தில் பேச வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க கொறடா செங்கோட்டையனிடம் கேட்டேன். ஆனால் மேலிடம் அனுமதிக்கவில்லை என்று கூறி எனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எனது தொகுதி குறைகளை கூறுவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. அழகிரியை சந்தித்த காரணத்தால் உங்கள் மீது க‌ட்‌சி மேலிடம் என் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த நடவடிக்கையையும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்' எ‌ன்‌றா‌ர். இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணனை அவர் வகித்து வந்த தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

0 comments: