இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் கூறியிருந்தார்.
ஷாருக்கானின் இந்த கருத்துக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அவரது “மை நேம் இஸ்கான்” பட போஸ்டரை கிழித்து எறிந்தனர். மன்னிப்பு கேட்கும் வரை அந்த படத்தை மும்பையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது.
சிவசேனாவின் இந்த மிரட்டலுக்கு ஷாருக்கான் அடிபணியவில்லை. தனது கருத்தில் மாற்றம் இல்லை என்று நியூயார்க்கில் தெரிவித்து இருந்தார். இதற்கு சிவசேனா கூறும்போது, ஷாருக்கான் இருப்பது மும்பையில். பாகிஸ்தானில் அல்ல என்று பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் சிவசேனாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். தான் சொன்ன கருத்தில் தவறு எதுவும் இல்லை என்று ஷாருக்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக லண்டனில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்த்து இருக்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்தை பெரிய பிரச்சினையாக கிளப்புவது ஏன் என்று புரியவில்லை. என் கருத்தில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.
இதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்தியன் என்ற முறையில் தவறாக எதுவும் சொல்லவில்லை. தனிப்பட்ட யாரையும் எதிர்த்து நான் எதுவும் கூற வில்லை.
எனக்கு எதிரான போராட்டம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதனால் எனது படத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்காக கரன் ஜோகர், கஜோல் மற்றும் பிசினஸ் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது தந்தை சுதந்திர போராட்ட வீரர். அவரிடம் இருந்து நான் எல்லா வற்றையும் கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஷாருக்கான் - கஜோல் நடித்த “மை நேம் இஸ்கான்” படம் உலகம் முழுவதும் வருகிற 12-ந்தேதி வெளியிடப்படுகிறது.
0 comments:
Post a Comment