இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் ஊழியர்களின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மதுரை சிபிஐ கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிபிஐ அலுவலகத்துக்கு கீழே உள்ள தளத்தில்தான் பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளது. சோதனையின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூடியிருந்தனர். இந்த நேரத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிபிஐ உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, மதுரையைத் தொடர்ந்து சென்னையிலும் சோதனை நடத்தி வருகிறோம். அதில் சில ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. அதன் பின்னர்தான் தவறு செய்தார்களா? யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிய முடியும். இன்று மாலையில் விரிவான தகவல்களை வெளியிடுவோம் என்றார்.
Friday, 5 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment