இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆஸ்ட்ரேலியாவில் இந்தியர்கள் மீது இன வெறி தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களை மும்பை மற்றும் மராட்டியத்தில் விளையாட அனுமதிக்க முடியாது என சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்ட்ரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத்பவார் மும்பை பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்துக்கு சென்றார்.
அவருடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சஷாங்க் மனோகரும் உடன் சென்றார். அங்கு பால் தாக்கரேயை சரத்பவார் சந்தித்து பேசினார்.
1 comments:
விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படவேயில்லை. இது ரொம்ப முக்கியம்.
கேவலத்திலும் கேவலம்.
Post a Comment