நடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை. மன அழுத்தம் காரணமாக, அவர் பொய் சொல்கிறார் என்று அவருடைய தந்தை தேவதாஸ் கூறினார்.
என் தாயார் நடிகை தேவிகா இறந்த பின், எனக்கு ஆதரவு சொல்ல யாரும் இல்லை. அம்மாவின் ஆவியுடன் பேசுவதற்கு ஆசைப்பட்டு, ஆவி அமுதாவை தொடர்பு கொண்டேன். அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் கலிபோர்னியாவில் பணிபுரியும் முத்துக்குமார் என்ற மெக்கானிக்கல் என்ஜினீயர் எனக்கு அறிமுகமானார். இருவரும் சந்தித்து பேசி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம்தேதி நானும், முத்துக்குமாரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள என் வீட்டில் வைத்து எங்கள் திருமணத்தை பதிவு செய்தோம். திருமணம் ஆகி 15 நாட்கள் மட்டுமே என் கணவர் என்னுடன் இருந்தார். அதன் பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். ஒரு சினிமா பைனான்சியர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்தான் எனது கணவரை கடத்தி வைத்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன். இப்போது கடந்த மூன்று நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. போலீசில் புகார் செய்தால் உன்னை கொன்று விடுவோம் என்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. எனவே, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து புகார் செய்யலாம்' என்று முடிவு செய்துள்ளேன், என்று கூறியிருந்தார்.இதுபற்றி கனகாவின் தந்தை தேவதாசை சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:
கனகாவுக்கு பதிமூன்று வயதாகும்போது, நான் அவளுடைய தாயார் தேவிகாவை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவர்களை நான் பார்க்கவே இல்லை. 18 வருடங்கள் கழித்து கனகாவை சந்தித்து பேசினேன்.
உனக்கு திருமண வயதாகி விட்டது. திருமணம் செய்துகொள் என்று கூறினேன். ஒரு பெண் தாய்மை அடைந்தால்தான் அவள் வாழ்க்கை முழுமை அடையும். நீ தாயானால்தான் நான் தாத்தா ஆக முடியும் என்றெல்லாம் பேசியபின், திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதித்தாள். நீங்களே மாப்பிள்ளை பாருங்கள் என்றாள்.
இது, நடந்தது 2008ம் ஆண்டு. ஆனால், 2007ம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக இப்போது கூறுகிறாள். திருமண ஆல்பம் எங்கே? என்று கேட்டால், இதுதான் என்று ஒரு கிழிந்த பேப்பரை காட்டுகிறாள். அதில், உருவமே தெரியவில்லை.
கனகா, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாள். ஒரு தந்தை என்ற முறையில் அவள் மீது அனுதாபப்பட்டு, நீ என்னுடன் வந்துவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உடனே, எங்க அம்மா மரணத்துக்கு நீதான் காரணம் என்று வெறிபிடித்தவள் போல் பேசுகிறாள். என்னை அவள் பேசவே விடவில்லை. அவள் பேசியதை எல்லாம் டேப் செய்து வைத்திருக்கிறேன்.
2007 ம் ஆண்டு திருமணம் நடந்திருப்பதாக கனகா கூறுகிறாள். அதில் ஒருவேளை உண்மை இருக்குமோ என்று ஒவ்வொரு திருமண பதிவு அலுவலகமாக சென்று ஆதாரங்களை தேடினேன்.
எந்த பதிவு அலுவலகத்திலும் கனகா திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரம் இல்லை. கற்பனையாக ஒரு கணவரை உருவாக்கிக்கொண்டு, மன அழுத்தம் காரணமாக கனகா பொய் சொல்கிறாள். என் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைக்கும்போது பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது.
தேவிகாவுடன்தான் எனக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. என் மகளையாவது அழைத்து வந்து வாழ வைக்கலாம் என்று நினைத்தால், கனகா என் வீட்டுக்கு வர மறுக்கிறாள் என்றார் தேவதாஸ்.
1 comments:
கர்மம் கர்மம். என்ன எழவுடா இது? என்னதான் நடக்குதுன்னே புரியல?
Post a Comment