இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
செல்வராகவன் இயக்கி, பொங்கல் வெளியீடாக வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தமிழில் தோல்வியைத் தழுவினாலும் தெலுங்கில் பெரிய வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ 32 கோடி செலவில் தயாரான ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழில் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒரு கதையைச் சொன்னார்கள். சிலர் அந்தப் படத்தை ஈழத்தின் கதை என்றெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டார்கள். இதைவிடக் கொடுமை, படத்தின் கதை இதுதான் என்று பிரஸ் ரிலீஸ் அடித்துக் கொடுத்தார் இயக்குநர் செல்வராகவன்.
வித்தியாசமான கதைக் களம் என்றாலும் பெரும்பான்மை ரசிகர்களுக்குப் பிடிக்காததால், இந்தப் படம் தமிழில் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு. 2010ம் ஆண்டில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது ஆயிரத்தில் ஒருவன்.
இந்த நிலையில், இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு யுகானிக்கி ஒக்கடு (யுகத்துக்கு ஒருவன்) என்ற பெயரில் ஆந்திராவில் ரிலீஸானது. ஆனால் முன்கூட்டியே, படத்தின் அருவருப்பான காட்சிகள், குழப்பமான காட்சிகள் அனைத்தையும் வெட்டியெறிந்துவிட்டு 2 மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக வெளியிட்டனர்.
கடந்த 5ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது. முதல் நான்கு நாட்களில் ரூ 2 கோடி வசூல் செய்துவிட்டதாக 'பாக்ஸ் ஆபீஸ்' தகவல்கள் கூறுகின்றன.
விட்டதைப் பிடித்த நிம்மதியில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பழையபடி மிடுக்குடன் நடமாட ஆரம்பித்துள்ளார்.
இந்த வெற்றியை கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, செல்வராகவன், ரவீந்திரன் ஆகிய ஐந்து பேரும் ஆந்திர தியேட்டர்களில் நேரில் தோன்றி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தை அவசரம் அவசரமாக ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். கார்த்தியே சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறாராம்.
0 comments:
Post a Comment