Monday, 15 February 2010

சென்னை கையேந்தி பவன் சுகாதார கேடு எச்சரிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையேற்றத்தால், சாலையோர பிளாட்பாரங்களில் டிபன், சாப்பாடு, "பாஸ்ட் புட்' கையேந்தி பவன்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன. சுகாதாரமற்ற முறையில் உணவுப் பண்டங்கள் தயாரிப் பது, திறந்து வைக்கப்படும் உணவுப் பண்டங்களில் ஈக்கள், கொசுக்கள் மொய்ப்பது மற்றும் சாலையில் செல்லும் வாகன தூசுகள் படிவதால், பொதுமக்களுக்கு பலவித நோய்கள் தொற்றிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றத்தால், சென்னையில் உள்ள ஓட்டல் களில் உணவுப் பண்டங்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. சுமாரான ஓட்டல்களில் கூட இரண்டு இட்லி 14 ரூபாய், தோசை 22 ரூபாய், புரோட்டா ஒரு செட் 24 ரூபாய், சாப்பாடு 40 ரூபாய் என விற்கப்படுகிறது. நடுத்தர ஓட்டல்களில் இட்லிகள் கூட 25 ரூபாய்க்கு மேல் தான் விலை. தோசை, புரோட்டா 30 ரூபாயாகவும், சாப்பாடு 50 ரூபாய்க்கு மேலும் கடுமையாக உயர்ந்துவிட்டன. ஓட்டல்களில் அனைத்து உணவுப் பண்டங் களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டு விட்டதால், ஏழை, நடுத்தர மக்கள், பொரு ளாதார வசதிக் கேற்ப சாலையோர கையேந்தி பவன்களை நாடிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. சாலையோர கையேந்தி பவன் களில் இரண்டு இட்லி 8 ரூபாய்க் கும், தோசை 10 அல்லது 12 ரூபாய்க்கும், புரோட்டா 10 அல் லது 12 ரூபாய்க்கும் கிடைத்து விடுகிறது. "பாஸ்ட் புட்' உணவுகள் அதிகபட்சமாக 35 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விலை குறைவாக இருக்கிறது என்று மக்கள் வாங்கிச் சாப்பிடுகின்றனர். தண்ணீர் சுத்தமாக இல்லை என்பதையோ, உணவுப் பண்டங்களில் ஈ, கொசு மொய்ப் பதையோ ஒரு பொருட்டாக கவனிப்பதில்லை. திருவல்லிக்கேணி பாரதி சாலை, பாரிமுனை "செகண்ட் லைன் பீச், மணலி நெடுஞ் சாலை, திருவொற்றியூர் நெடுஞ் சாலை, ராயபுரம் கிழக்கு கல்லறை சாலை, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் பாரத் நகர், யானைக்கவுனி வால்டாக்ஸ் ரோடு, தங்கச் சாலை தெரு, வியாசர்பாடி கன்னிகாபுரம், பிராட்வே பிரகாசம் சாலை, எழும்பூரில் மாண்டியத் சாலை, ராயப் பேட்டை நெடுஞ்சாலை, சூளைமேடு நெடுஞ்சாலை, சேத்துப் பட்டு, எழும்பூர், வடபழனி, விருகம்பாக்கம், தி.நகர் பஸ் ஸ்டாண்ட், பட்டினப்பாக்கம், சென்ட்ரல் ரயில் நிலையம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகளும், சாலையோரக் கடைகளும் புற்றீசல் போல் பரவியுள்ளன. பல இடங்களில், இக்கடைகள் போக்குவரத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பிளாட் பாரங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. உணவுப் பண்டங்களை விற்பனைக்கு வைக்கும் போது அதை மூடி வைப்பதில்லை. ஈ.க்கள், கொசுக்கள் மொய்ப்பதுடன், சாலையில் போகிற வாகனத் தூசுகளும் உணவுப் பொருளின் மீது படிந்து விடுகின்றன. சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத் தில் உணவு சமைக்கும் போது, ஈக்கள், கொசுக்களுடன் பூச்சிகளும் உணவில் விழுந்து கலந்து விடும் நிலையும் உள்ளது. இக்கடைகளில் குறைந்த விலைக்கு உணவு கிடைப்பதால், உணவின் தரம் பற்றி கண்டு கொள்ளாமல் வாங்கிச் சாப்பிடுபவர்கள், மலேரியா காய்ச்சல், குடல் நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது. கையேந்தி பவன் நடத்துபவர் களிடம், "உணவுப் பண்டங்களில் ஈ, கொசு மொய்க்கிறதே, தூசி படிகிறதே மூடி வைக்கக் கூடாதா' என்றால், "உனக்கு சாப்பிட பிடிக்கலைன்னா, ஸ்டார் ஓட்டல்ல போய் சாப்பிடு; இங்க ஏன் வர்ற. நீ கொடுக்கிற அஞ்சு ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் ஈ, கொசு விழாமல் வலை போட்டு மூடி வைக்கணுமாக் கும்' என்று ஏளனப் பதிலைத் தான் தருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, "சாலையோர கையேந்தி பவன் களை அப்புறப்படுத்த, அவ்வப் போது நடவடிக்கை எடுத்தாலும், அந்தக் கடைகள் மீண்டும் முளைப்பதற்கு, கடை நடத்தும் பகுதிகளில் உள்ள சில கவுன் சிலர்கள், அரசியல் முக்கிய புள்ளிகள், சுகாதார அதிகாரிகள் ஆகியோர் காரணமாக இருக்கின்றனர். இவர்கள் மாமூல் வாங்கிக் கொண்டு, கண்டும் காணாமலும் இருப்பதால், திடீர் கையேந்தி பவன்கள் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. கையேந்தி பவன்கள் குறித்தும், அதற்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக் கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்' என்றார்