Wednesday, 17 February 2010

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, சவுந்தர்யாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. மணமகன் பெயர் அஸ்வின். சென்னை யில் உள்ள பிரபல கட்டு மான நிறுவன உரிமையாளர் ராம்குமாரின் மகன். கோவா படப்பிடிப்பு பகுதிகளில் அஸ்வினை அடிக்கடி காண முடிந்தது.
அதன் பிறகுதான் இருவரும் காதலிக்கும் விஷயம் வெளியே தெரிய வந்தது. ரஜினியிடம் அஸ்வினை அறிமுகம் செய்தார். அவருக்கும் பிடித் துப்போனது. இதையடுத்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தனர். முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர், நடிகைகள், நெருங்கிய, உறவி னர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.
சென்னை அடையாறு பார்க் ஓட்டலில் இன்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
சுல்தான் தி வாரியார் படம் ரிலீசானதும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதி இன்று முடிவு செய்யப்படுகிறது.

0 comments: