Thursday, 18 February 2010

ஜாமீனில் வெளிவந்த ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜாமீனில் வெளிவந்த கொலைக் குற்றவாளி, பட்டாபிராம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.அவருடைய உடலை போலீஸôர் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அசோக்நகரைச் சேர்ந்தவர் பூபாலன் (எ) சுரேந்தர் (24). கொலைக் குற்றவாளியான இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்திருந்தார்.இந்நிலையில் பட்டாபிராம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகே முட்புதரில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் புதன்கிழமை கிடந்தது.அதை சோதனை செய்த போலீஸôர் கொலை செய்யப்பட்டிருப்பது சுரேந்தர்தான் என்பதை உறுதி செய்தனர். அந்த இடத்தில் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், மற்றும் துணிகளை போலீஸôர் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆவடியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவருடைய கூட்டாளியை கொலை செய்த வழக்கில் சுரேந்தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார் என்று போலீஸôர் தெரிவித்தனர்.

0 comments: