Friday, 19 February 2010

ஆபாச ஐயர் தேவநாதன் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆபாச ஐயர் தேவநாதன் வழக்கை விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், டி.எஸ்.பி. விஜயராகன் ஆகியோர் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மச்சபேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ்லீலையில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து தலைமறை வான அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தேவநாதனை போலீசார் இதுவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. காஞ்சீபுரத்தில் உள்ள பல வி.ஐ.பி. பெண்களுடன் அர்ச்சகர் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டது அம்பலம் ஆனது. இந்நிலையில் அர்ச்சகர் தேவநாதன் தங்களை கோவில் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டதாக காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்ததாரா, கலா, அபிதா, வள்ளி ஆகிய 4 பெண்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகனுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அர்ச்சகர் தேவநாதன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பெண் களுக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த இன்ஸ் பெக்டர் பட்டாபிராமன், டி.எஸ்.பி. விஜயராகன் ஆகியோர் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று அர்ச்சகர் தேவநாதன் நீதிமன்ற காவல் முடிந்து காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத் தப்பட்டார். தேவநாதனை 15 நாள் காவல் நீடிப்பு செய்து நீதிபதி சுதா உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் 2 நாட்களில் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு சம்பந்தமான குற்றப் பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள்

0 comments: