Thursday, 18 February 2010

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதான தடையை நீக்கினார் பால் தாக்கரே

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய பால்தாக்ரே நேற்று இதை வாபஸ் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த தடையை அவர் நேற்றிரவு திடீரென வாபஸ் பெற்றார். இது குறித்து அவர் கூறுகையில், `தேசிய நலனுக்கு ஆதரவாக பேசுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் நாங்கள் ஏன் ஆஸ்திரேலிய வீரர்களையோ, ஐ.பி.எல். கிரிக்கெட்டையோ எதிர்க்கவேண்டும்?' என்று விரக்தியாக பதில் அளித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான தடையை அவர் மறைமுகமாக வாபஸ் பெற்றார்.

0 comments: