Tuesday, 9 February 2010

பெ‌ற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செ‌ய்த த‌ந்தை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

திருவ‌‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கன்னம்பாக்கத்தை சேர்ந்த விசுவநாதன்-பவுனம்மாள் த‌ம்ப‌திக‌ளி‌ன் ஒரே மகள் கவுதமி (22). கவுதமிக்கும், பொன்னேரி அருகே உள்ள வேம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நட‌‌ந்து‌ள்ளது.

ஒரே மகள் என்பதால் திருமணத்தின்போது 60 சவரன் நகை போட்டு திருமணத்தை விமரிசையாக நடத்தியு‌ள்ளா‌ர் ‌விசுவநாத‌ன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவுதமிக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்து‌ள்ளது. குழந்தை பிறந்த பிறகு ஜெய்சங்கர் மனைவியை பார்க்க செல்லவில்லை. அவரது குடும்பத்தினரும் சென்று பார்க்கவில்லை.

இத‌னிடையே கூடுதலாக 40 பவுன் நகை தந்தால்தான் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வேன் என்று ஜெய்சங்கர் கூ‌றியு‌ள்ளா‌ர். இதனா‌ல் கவுதமியின் அ‌ண்ண‌ன் பழனி, ஜெய்சங்க‌ரிட‌ம் சமரச‌ம் பே‌சியு‌ள்ளா‌ர். இத‌ற்கு ஜெ‌ய்ச‌ங்க‌ர் உடன்படவில்லை. கூடுதல் வரதட்சணை தராவிட்டால் மனைவி, குழந்தையை அழைத்து செல்லமாட்டேன் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் ஜெ‌ய்ச‌ங்க‌ர்.

இந்நிலையில் நேற்‌றிரவு திடீரென்று மாமியார் வீட்டுக்கு சென்றா‌ர் ஜெ‌ய்ச‌ங்க‌ர். இரவில் கவுதமியும், அவரது தாயார் பவுனம்மாவும் தூங்கியு‌ள்ளன‌ர். அவர்களுக்கு நடுவில் குழந்தை ‌தூ‌ங்‌கியு‌ள்ளது. கீழே படுத்திருந்த ஜெய்சங்கர் நள்ளிரவில் மனைவி கவுதமியிடம் சில்மிஷம் செய்து‌ள்ளா‌ர். இதனால் கண்விழித்த பவுனம்மா ஜெய்சங்கரை மனைவியுடன் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனியாக படுத்து தூங்கினார்.

சல்லாபம் செய்வதுபோல் நடித்து மனைவி கவுதமியின் கழுத்தை நெரித்து கொன்றார் ஜெ‌ய்ச‌ங்க‌ர். கைக்குழந்தையையும் கழுத்தை நெரித்து கொன்று‌‌ள்ளா‌ர். விடியும் வரை எதுவும் நடக்காததுபோல் பிணமாக கிடந்த மனைவி-குழந்தையுடன் படுத்து கொண்டார்.

இன்று காலை 6 மணியளவில் பவுனம்மா எழுந்து காபி போடுவதற்காக சமையல் அறை‌க்கு சென்று‌ள்ளா‌ர். அப்போது படுக்கை அறை கதவு வேகமாக மூடும் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பவுனம்மா ஓடிவ‌ந்து கதவை தட்டியு‌‌ள்ளா‌‌ர். ஜெய்சங்கர் கதவை திறக்காததா‌ல் சத்தம் கேட்டு ஓடிவந்த கவுதமியின் அண்ணன் பழனியும் கதவை த‌ட்டியு‌ள்ளா‌ர்.

திடீரென்று ஜெய்சங்கர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடியு‌ள்ளா‌ர். உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் கவுதமி பிணமாகவு‌ம், குழந்தை கட்டிலில் இறந்தது‌ம் கிடந்தது. இதை பா‌ர்‌த்து கத‌றி அழுத அ‌ண்ண‌ன் பழனி, ஜெய்சங்கரை துரத்தி சென்றார். அதை பார்த்து பொதுமக்களும் திரண்டு வந்து ஜெய்சங்கரை மட‌க்‌கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் வீட்டுக்குள் பூட்டிவைத்து ஆல‌ப்பா‌க்க‌ம் காவ‌ல்துறை‌யினரு‌க்கு தகவல் கொடுத்தனர். ‌வி‌ரை‌ந்து வ‌‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் ஜெ‌ய்ச‌ங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.

0 comments: