இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடிய தலைவர்கள் எல்லாரும் கொல்லப்பட்டு விட்ட போதிலும் ஈழ நாட்டுக் கனவு இன்னமும் சாகவில்லை என்று இலங்கை ராணுவம் எச்சரித்துள்ளது.
ஆகையால் இலங்கையில் குறிப்பாக வடக்கில் கண்காணிப்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று ராணுவத் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் நடந்த போது ராணுவத்துக்குத் தலைமை பொறுப்பு ஏற்று இருந்தவர் சரத் பொன்சேகா.
அவர் விலக்கப்பட்டு அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டவர் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா.
இவர், இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்லாடி, தொப்பிகலா, வாகரை, புன்னானி ராணுவ முகாம் களுக்கு கடந்த வாரம் சென்று அங்கு வீரர்களிடம் பேசினார்.
“விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
“கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட போதிலும், தமிழீழம் குறித்த அவர்களது கனவு கலையவில்லை.
“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே ராணுவ வீரர்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்; போரிடுவதற்காக அல்ல.
“நமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்துக்கு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ராணுவத்தில் புதிதாகச் சேர்ந்த வீரர்களுக்கு, இந்த ஆண்டு சிறப்புப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படும்,” என்றார் ஜயசூரியா.
அண்மைய மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் தனி ஈழ நாடு தேவையா என்பது பற்றி வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தனி ஈழ நாட்டுக்கு ஆதரவாக முடிவுகள் வெளியாகி வருகின்றன.
புலிகளுடனான போர் முடிவுற்ற பிறகும் நாட்டில் விடுதலைப் புலி போராளிகள் இருப்பதாக அரசாங்கம் பல தடவை அறிவித்து இருக்கிறது
Wednesday, 17 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment