Sunday, 14 February 2010

பால் தாக்கரேயின் எதிர்ப்பு ஷாருப்கானின் ஆதரவு கடும்கோபம் வெளியீடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஷாருக்கான் நடித்துள்ள ‘மை நேம் இஸ் கான்’ திரைப்படம், சிவசேனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மும்பையில் நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்தை திரையிடும் எல்லா தியேட்டர்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால், சிவசேனாவின் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. எந் தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி படம் நேற்று திரையிடப்பட்டது. எல்லா தியேட்டர்களிலும் கூட்டம் குவிந்துள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளில் ஒருநாள் தாமதமாக நேற்று இந்த படம் வெளியானது. சில இடங்களில் மட்டுமே சிவசேனாவினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தனது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று எழுதியுள்ள தலையங்கத்தில் பால் தாக்கரே கூறி இருப்பதாவது: கடந்த 7& 8 நாட்களாக அசோக் சவான் செயல்பட்ட விதத்தை பார்த்தபோது அவர் மகாராஷ்டிரா முதல் வரா அல்லது ஷாருக்கானின் பாதுகாவலரா? என்று ஆச்சரியப்பட்டேன். அவர் ஷாருக்கானின் பாது காவலராக இருந்தால், செக்யூரிட்டி சீருடையை அணிந்து ஷாருக்கானின் ‘மன்னத்‘ பங்களா முன்பு காவலுக்கு நின்று, அங்கு வருபவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். ஷாருக்கானுக்கும் அவருடைய படத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதில் அசோக் சவான் தீவிரமாக இருந் தபோது, விதர்பாவில் கடன் தொல்லையால் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் தற்கொலை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, ஷாருக்கானின் முட்டாள்தனமான படம் வெளியாக பாது காப்பு வழங்குவது சவானுக்கு முக்கியமாகி விட்டது. கானின் அடிமைகளைபோல் மும்பை போலீசார் நடத் தப்பட்டனர். அவர்களை கொண்டு சிவசேனாவினரை அடித்து கைது செய்து காவலில் அடைத்தது இந்த அரசு. இந்தளவு பாதுகாப்பு கொடுப்பதற்கு, இந்த படம் என்ன சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதா? பாகிஸ்தானை நேசிக்கும் ஷாருக்கானின் படத்தை ஏ.கே.47 துப்பாக்கிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் வெளியிட செய்தது மூலம் இந்த அரசு சாதித்தது என்ன? சிவசேனாவினரை போலீசார் இதுபோல் நடத் தினால் நாடு பச்சை நிறமாக மாறிவிடும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இளவரசர்‘ ராகுல் காந் தியை மகிழ்விக்க இது நடத்தப்பட்டது. மும்பையில் தீவிரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 20 போலீசாரை தியாகிகள் என்று சவான் இனி அழைக்க தேவையில்லை. அதற்கு பதிலாக சுட்டுக் கொல்லப்பட்ட 9 பாகிஸ்தான் தீவிரவாதிகளை தியாகிகளாக அறிவித்து, அவர்களுக்கு பளிங்கு நினைவிடம் அமைத்து தினமும் மரியாதை செலுத்தட்டும். இவ்வாறு பால்தாக்கரே கூறியுள்ளார்.

0 comments: