இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் இவ்வாண்டு காதலர் தின சிறப்பாக காதல் மாத்திரை என்று ஒன்று அறிமுகமாகி உள்ளது. ஆண்டுதோறும் உலகளவில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், இந்த ஆண்டு காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு பலரும் தயாராகி வருகின்றனர். சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா, சிட்டி சென்டர், அல்சாமால், அபிராமி மால் போன்ற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகளில் காதலர் தின ஸ்பெஷல் பரிசு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.
இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு புது வரவாக ‘காதல் மாத்திரை’ அறிமுகம் ஆகியுள்ளது. கேப்ஸ்யூல் வடிவில் இருக்கும் இதன் உள்ளே இதயம் படம் போட்ட ஒரு சிறிய பேப்பர் உள்ளது. இதில் விருப்பப்பட்டவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை எழுதி மாத்திரையில் அடைத்து கொடுக்க வேண்டும். இது வித்தியாசமாக உள்ளதால் காதலர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு பாட்டிலில் 6 மாத்திரைகள் உள்ளன. இதன் விலை ரூ.60. ‘காதல் மாத்திரை’யை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தவிர கடைகளில் ‘ரெக்கார்டிங் வாய்ஸ்’ வாழ்த்து அட்டை விற்பனைக்கு வந்துள்ளது. இதில் நாம் சொல்ல நினைத்ததை வாழ்த்து அட்டையை பிரித்து சொன்னால், அந்த அட்டையை பிரித்து பார்க்கும் போது நம் குரலிலேயே ஒலிக்கும். இந்த புதிய வகை வாழ்த்து அட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் வாழ்த்து அட்டையில் ‘ஐ லவ் யூ’ என்று வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யப்பட்ட அட்டையும் கிடைக்கிறது. இதன் விலை ரூ.80ல் இருந்து ரூ.300 வரை.
பெரும்பாலும் வாழ்த்து அட்டைகளும், பரிசு பொருட்களும் இதய வடிவத்திலேயே கடைகளில் விற்கப்படுகின்றன. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
காதலர் தினத்தன்று பரிசு பொருட்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மற்ற பண்டிகை கால விற்பனையைவிட காதலர் தினத்தில் விற்பனை அதிகமாக இருக்கிறது. காதலர் தின சிறப்பு வாழ்த்து அட்டை விலை ரூ.20 முதல் ரூ.500 வரை உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து அட்டைகளை வாங்கி செல்கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் கூட வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் வாங்க வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thursday, 11 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த இணையத்தளத்தில் மூலம் காதலர்தினத்தில் காதல் மாத்திரை புதிதாக அறிமுகமானதை சொன்னதற்கு நன்றி
Post a Comment