இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாகிம் அன்சாரியின் வக்கீல் ஷாகித் ஆஸ்மி மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அதே நேரத்தில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக பாகிம் அன்சாரி என்பவனும் கைதானான்.மும்பை தாக்குதல் வழக்கு, ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அன்சாரி சார்பாக, ஷாகித் ஆஸ்மி என்ற வக்கீல் ஆஜராகி வந்தார். இவரது அலுவலகம், மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று திடீரென புகுந்த நான்கு பேர், ஷாகித் ஆஸ்மியை சுட்டு விட்டு தப்பிச் சென்றனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆஸ்மியை, உடனடியாக காட்கோபரில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஷாகித், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களில் ஒருவரும், கோவந்தி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அபு ஆசிம் ஆஸ்மியின் மருமகன். மும்பையில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஷாகித் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, 12 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment