Wednesday, 10 February 2010

மாணவனின் கழுத்தை அறுத்த ஆசிரியர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் அனும கொண்டா கிராமத்தை சேர்ந்தவர் எல்லையா. வன ஊழியர். இவரது மனைவி மீனாகுமாரி. இவர்களது மகன் உதய்கல்யாண் (11). அங்குள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். நாகராஜும், எல்லையாவும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து தொழில் செய்து வந்தனர். கொடுக்கல் வாங்கலில் எல்லையா, நாகராஜை ஏமாற்றியதாலும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் நாகராஜ், எல்லையா மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார். தன்னை ஏமாற்றிய எல்லையாவை பழிவாங்கத்துடித்தார். இதன்படி அவர் நேற்று எல்லையா வீட்டில் இல்லாத சமயத்தில் அங்கு சென்றார். நாகராஜை மீனாகுமாரி வரவேற்று குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். அப்போது நாகராஜ் திடீரென வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த உதய்கல்யாணின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் சிறுவன் வலி தாங்கமுடியாமல் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த மீனாகுமாரி அங்கு ஓடி வந்து தடுத்தார். அப்போது அவரது வலது கையிலும் கத்திகுத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஆசிரியர் நாகராஜ் தப்பி ஓடினார். உதய்கல்யாண் வாரங்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவன் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் ஒருவர் மாணவனின் கழுத்தை அறுத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: