Tuesday, 2 February 2010

தலை துண்டித்து வாலிபர் கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொன்நகரை சேர்ந்தவர் சரவணன்(27). இவர் மீது கொலை வழக்கு விசாரணை யில் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 4ம் தேதி முதல் சரவணனை காண வில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கான்ட்ராக்டர் முருகேசனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, கூலிப்படையை ஏவி, சரவணனை அவர் தீர்த்து கட்டியது தெரிந்தது. இதற்கு உடந்தையாக இருந்ததாக முருகேசனின் சித்தப்பா மகன் மாதையன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

முருகேசனின் மனைவிக்கும், சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலையடுத்து, சரவணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த சரவணன், ‘தன்னை சிறையில் தள்ளிய முருகேசனை தீர்த்து கட்டாமல் விட மாட்டேன்‘ என கூறியுள்ளார். இதை அவரது நண்பர் செந்தில் குமார் மூலம் அறிந்த முரு கேசன் அதிர்ச்சி அடைந் தார். சரவணனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இதற்காக செந்தில்குமார் மூலம் கூலிப்படைத் தலைவன் கோபால் என்பவரை ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக ரூ.5 லட்சம் பேரம் பேசியுள்ளனர். இதை யடுத்து, கடந்த மாதம் 4ம் தேதி செந்தில்குமார், சரவணனை கோபாலிடம் அனுப்பி வைத்துள்ளார். அன்று இரவு மூக்கனேரியில் வைத்து மது குடித்தனர். அப்போது கோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து சரவணன் தலையை துண்டித்து கொன்று ள்ளனர். அதை செல்போனி லும் படம் பிடித்துள்ளனர்.

கை, கால்கள், உடலை மூக்கனேரியில் வீசியுள்ளனர். தலையை சாக்குமூட்டை யில் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை போலீசார் மூக்கனேரியில் நேற்று, சரவணன் உடலை தேடினர். இதில் கிணற்றில் வீசப்பட்ட தலை, இடது கால், இடது கை சிக்கியது. முண்டத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை. கொலையில் தொ டர் புடையதாக கருதப்படும் கோபால், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைதாகி சேலம் சிறையில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

0 comments: