இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாயில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒருவர் விமானத்துக்குள் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார். சிகரெட் பிடித்து பயணிகள் முகத்தில் ஊதினார். இதுகுறித்து விமானியிடம் பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சென்னை தரைக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு விமானி தகவல் தந்தார்.
இதையடுத்து ஓடுபாதையை சுற்றி பாதுகாப்பு படையினரும் அதிரடிப் படையினரும் நிறுத்தப்பட்டனர். இரவு 11.20க்கு விமா னம் தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் பாய்ந்து கலாட்டா செய்தவரை அமுக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவரது பெயர் ஜாபர் அலி (38). ராமநாதபுரம் இலந்தன்குடியை சேர்ந்தவர். துபாயில் ஓட்டல் தொழிலாளியாக இருக்கிறார் என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், ‘ஆயுதம் எதுவும் இல்லை. விமானத்தில் தந்த மதுவை அளவுக்கு அதிகமாக குடித்து போதையில் தகராறு செய்திருக்கிறார்’ என்பது தெரிந்தது.
தனது செயலுக்கு ஜாபர் அலி மன்னிப்பு கேட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Sunday, 31 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment