இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சேலம் அருகிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் செல்போன் தகராறில் 10ஆம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக மாணவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. நெய்வேலியை சேர்ந்த மாணவர் அமர்ராஜ் (16), விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அமர்ராஜை காணவில்லை. விடுதி வார்டன் தேடியபோது, கழிவறை அருகே தலையில் ரத்தக் காயத்துடன் அமர்ராஜ் கிடந்தார். உடனடியாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அமர்ராஜ் இறந்தார். தகவல் அறிந்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமு தலைமையில் போலீசார் பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அமர்ராஜுக்கும் அவரது நண்பரான மற்றொரு மாணவருக்கும் தகராறு இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் அமர்ராஜை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
‘செல்போன் வாங்குவதற்காக என்னிடம் அமர்ராஜ் பணம் கொடுத்திருந்தான். அதை செலவு செய்துவிட்டேன். செல்போன் வாங்கி கொடுக்காவிட்டால் தலைமையாசிரியரிடம் சொல்வதாக அமர்ராஜ் மிரட்டினான். இதனால் ஆத்திரமடைந்து கழிவறை அருகே அவனது கழுத்தை நெரித்து கல்லால் தாக்கினேன்’ என வாக்குமூலத்தில் அந்த மாணவர் தெரிவித்திருப்பதாக போலீசார் கூறினர்.
Wednesday, 3 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment