Sunday, 28 February 2010

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 இலட்சம் மக்கள் பாதிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிலியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்ப ட்டதாகவும், இதுவரை முன்னூறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட் டதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பான இடம்நோக்கி நகருமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளதுடன், அரசாங்க ஊடகங்கள் உடனுக்குடன் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன.

கட்டடங்கள், வீடுகள், மரங்கள் வாகனங்கள் என்பன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் சென்று பார்வையிட்ட அந்நாட்டின் ஜனாதிபதி சுனாமி எச்சரிக்கையுள்ள பகுதிகளை அபாய வலயங்களாகப் பிரகடனம் செய்தார். வெளியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

சிலியை அண்மித்துள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கரையோரங்களிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொண்டு மக்களை விழிப்பூட்டியது. இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கத் தேவையான உதவிகளை சிலிக்கு வழங்கப் பல நாடுகள் முன்வந்தன. காயமடைந்த பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல அரச வாகனங்களும் தனியார் பஸ் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.

இறுதியாகக் கிடைத்த தகவலின் படி ஆறு ஒன்று உடைப்பெடுத்து வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் 60 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

0 comments: