இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2010-11ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை இன்று ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து பட்ஜெட் உரையைப் படிக்கத் துவங்கினார்நாடாளுமன்ற பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
*உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி
*ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
*அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே முக்கிய இலக்கு
*8 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது
*தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் உணவு உற்பத்தி பாதிப்பு
*கடந்த பட்ஜெட்டின்போது பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது
*விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்.
*திருப்பூர் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு மாநில அரசுக்கு ரூ. 200 கோடி நிதியுதவி.
*2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.
*வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
*நாடாளுமன்ற பட்ஜெட் : ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு.
*2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்.
*ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,1000 கோடி ஒதுக்கீடு .
*ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்.
*ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்.
*ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்.
*வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்.
*நாடாளுமன்ற பட்ஜெட் : பெட்ரோல்-டீசல் மீது 1 ரூபாய் கூடுதல் வரி.
*பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு.
*கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு.
*கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு.
*சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு.
*ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்.
*மொபைல் போன்கள் மீதான வரி குறைப்பு. விலை குறையும்.
*அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்.
இதில் பெட்ரோல், டீசலுக்கு மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment