Sunday, 10 January 2010

கையேந்தி பவனில் அதிரடி நடவடிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் சாலையோரங்களில் உணவுப் பொருட்கள் தரமில்லாமல் தயாரித்து விற்கப்படுவதாக சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி மேயர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மாநகராட்சி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், 10 உதவி சுகாதார அதிகாரிகள், 20 துப்புரவு ஆய்வாளர்கள், 15 உணவு ஆய்வாளர்கள், 90 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 180 பேர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், பாண்டிபஜார், கே.கே.நகர், அசோக் நகர், எத்திராஜ் சாலை, பாந்தியன் சாலை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, சேப்பாக்கம், கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை, எழும்பூர் ரயில் எதிரில், காந்தி இர்வின் சாலை உள்ளிட்ட இடங்களில் இருந்த சாலையோர சிற்றுண்டி கடைகளில் சோதனை நடத்தினர்.

அங்கு தரமில்லாமல் தயாரித்து வைத்திருந்த பிரியாணி, இட்லி, பஜ்ஜி, போண்டா, வடை, பரோட்டா, பானிபூரி, டீத்தூள், மாவு, எண்ணெய் என 25 ஆயிரம் கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டது.

1 comments:

said...

ரெண்டு ருபாய்க்கு இட்லியும், பதினைந்து ருபாய்க்கு சாப்பாடும் விற்று பிழைபவர்களின் வயிற்றில் அடிப்பது அராஜகத்தின் உச்சம்.

சாத்துகுடி ஜூஸ் ஐம்பந்து ருபாய்க்கு விற்கும் சரவணபவன் ஹோட்டலுக்கு சென்று சோதனை செய்ய முடியுமா இவர்களால்...