Sunday, 10 January 2010

ஆள் மாறட்டத்தால் கொலை விவரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வெற்றிவேல், சமூக விரோதிகளால் வெட்டிக்கொல்லப்பட்டார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், அசோக்குமார் என்ற மகனும், சிந்து பாரதி என்ற மகளும் உள்ளனர். இவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சமும் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது . வெற்றிவேலின் மகன் அசோக்குமார் அம்பாசமுத்திரத்தில் உள்ள வையாபுரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை என்ஜினீயர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று வெற்றிவேல் ஆசைப்பட்டுள்ளார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக அசோக்குமாருக்கு தேவையான பள்ளி படிப்பு செலவு, உயர் கல்வி பொறியியல், சேர்க்கை கட்டணம் தங்கும் விடுதி, டியூசன் கட்டணம் என முழு கல்வி செலவையும் தமிழக போலீசார் சார்பில் இலவசமாக செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் கைதான கொலையாளி கூறியதாவது என் தங்கை சிவகாமிக்கும், கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கும் திருமணம் ஆன சில வாரங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜாதகத்திலும், கல்வி தகுதியிலும் பொய்யான தகவல்களை கூறி திருமணம் செய்து வைத்து விட்டதாக தகராறு செய்தார். இதனால் நானும் எங்கள் உறவினர்களும் சமரசம் செய்து வைத்தோம். ஆனால் என் தங்கையை அவர்கள் சித்ரவதை செய்து கூடுதல் வரதட்சணை கேட்டனர். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கார் வாங்கி கொடுப்பதாக கூறினோம். ஆனால் அதையும் ஏற்காமல் என் தங்கையை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.இதனால் சிவசுப்பிரமணியன் மீது வரதட்சணை வழக்கு போட்டோம். இதையடுத்து அவர் பணியில் ஈருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில மாதங்களிலேயே கோர்ட்டில் தடை ஆணை பெற்று மீண்டும் வேலையில் சேர்ந்தார்.பின்னர் நாங்கள் தெரிந்த போலீஸ் அதிகாரிகள் மூலம் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலும் சிவசுப்பிரமணியன் உடன் பாட்டுக்கு வரவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள், தங்கை வாளா வெட்டியாக வீட்டில் இருக்கும் போது சிவசுப்பிரமணியன் உயிரோடு இருக்க கூடாது என்று நினைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.இதற்காக எங்களது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் ஆலோசனை செய்தோம்.சிவசுப்பிரமணியன் கடையத்திலேயே தங்கி இருந்ததால், நாங்களும் அங்கு தங்கி இருந்து கொலை செய்ய முடிவு செய்தோம். ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த கள்ளபிரான் என்பவரை எங்களுடன் கூட்டாக சேர்த்து கொண்டு அவரது தோட்டத்தில் தங்கினோம். அவருடன் தொடர்பு கொண்டு பேச நாங்களே அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்தோம். கொலை திட்டத்தை நிறைவேற்ற தென்காசிக்கு சென்று ஒரு பழைய மோட்டார் சைக்கிளையும் வாங்கினோம்.கடந்த 1 மாதமாக ஆழ்வார்குறிச்சி தோட்டத்தில் தங்கி இருந்து நாட்டு வெடிகுண்டுகள், பைப் வெடிகுண்டுகள் தயாரித்தோம். அந்த சமயத்தில் எனது தம்பிகள், கண்ணன், முருகன் ஆகியோர் கடையம் சென்று, சிவசுப்பிரமணியன் வழக்கமாக எங்கெங்கு தினமும் செல்கிறார், ஊருக்கு ஒதுக்குப்புறமாக எப்போதாவது செல்கிறாரா என்று நோட்டம் பார்த்து கூறினார்கள்.அவர் அடிக்கடி அம்பை கோர்ட்டு மற்றும் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதனால் அம்பை வந்து விட்டு ஆழ்வார்குறிச்சி வழியாக திரும்பும் போது சிவசுப்பிரமணியனை கொலை செய்வது என்று முடிவு செய்தோம். சம்பவத்தன்று அம்பையில் நின்று கொண்டு இருந்த எங்கள் நண்பர் ஒருவர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஹெல்மெட்டோடு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வருவதை பார்த்து விட்டு, தவறுதலாக கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வருவதாக எங்களிடம் கூறினார். இருவரும் ஒரே உடற்கட்டமைப்புடன் இருந்ததால் அவர் தவறாக நினைத்து விட்டார். நாங்களும் சிவசுப்பிரமணியன் வருவதாக நினைத்து வெடிகுண்டுகள், அரிவாளுடன் ஆம்பூர் பாலம் அருகே புதர் மறைவில் பதுங்கி இருந்தோம். மோட்டார் சைக்கிளில் வெற்றிவேல் வருவது எங்களுக்கு சிவசுப்பிரமணியன் வருவது போலவே தெரிந்தது. அருகில் வந்ததும் நாங்கள் தயாராக வைத்து இருந்த பைப் வெடிகுண்டுகளை வீசினோம். ஒரு குண்டு அவரது மோட்டார் சைக்கிள் அருகே விழுந்து வெடித்து. அடுத்த குண்டு அவரது காலில் பட்டு வெடித்தது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினோம்.அப்போது அமைச்சர்கள், அதிகாரிகள் கார் வந்ததால் நாங்கள் தப்பி ஓடினோம். நான் 3 பேரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினேன். மற்றவர்கள் மோட்டார் சைக்கிளை எடுக்க முடியாமல் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.மோட்டார் சைக்கிளில் சென்றால் போலீசார் அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைத்து ஒரு கிராமத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ப

0 comments: