Monday 11 January 2010

தமிழகத்தை தன் எல்லைக்குள் கொண்டு வரும் மு.க.அழகிரி ? நடக்குமா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக முதல்வரின் மூத்த மகன் அழகிரி தமது அதிகாரத்தை ஏறத்தாழ இரட்டிப்பாக்கிக்கொள்ள விரும்புகிறார். தற்போது ஒன்பது மாவட்டங்களின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் அவர், அதை 16 ஆக அதிகரிக்க ஆசைப்படுகிறார். திமுக நிர்வாகத்தை 32 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். அந்த 32 மாவட்ட நிர்வாகங் களையும் சரிபாதியாகப் பிரிக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு அழகிரி கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது தமிழ் நாட்டின் பாதி கட்சியில் தனது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என அழகிரி விரும்புகிறார். தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தபடி தற்போது மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களை அழகிரி நிர்வாகம் செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகங்களைச் சரிபாதியாகப் பிரிக்க வேண்டும் என்று அழகிரி விரும்புவதாக ஜூனியர் விகடன் வாரப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது எல்லையை அதிகரிப்பதன் மூலம் தம்பி ஸ்டாலினின் எல்லையைச் சுருக்க அழகிரி விரும்புகிறார். ஆனால், குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு அளித்த பேட்டியில் அண்ணன் அழகிரியைப் பற்றிப் பேசும்போது சாதுரியமாகவே பேசினார் ஸ்டாலின். மாநில அரசியலுக்கு அழகிரி வருவதை வரவேற்கிறீர்களா? என்ற கேள்விக்கு “அவர் இப்போதும் மாநிலத்தில்தானே (தமிழகத்தில் தானே) அரசியல்வாதியாக இருக்கிறார்” எனக் கூறிச் சிரித்தார். திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களும் தென் மண்டலத்துக்குள் வர வேண்டும் என்பது அழகிரியின் கோரிக்கை. திருச்சி தொழில் வளத்துக்கும், தஞ்சாவூர் சுற்றுலாத் துறைக்கும், நாகப்பட்டினம் துறைமுக வளத்துக்கும் பெயர் பெற்றவை. அண்மைய இடைத்தேர்தலில் திருச்செந்தூருக்கு அழகிரி பொறுப்பாளராக இருந்தார். அவர், 48,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தார். வந்தவாசியிலும் திமுக வெற்றி பெற்றது. ஆனால் 28,000 வாக்கு வித்தியாசத்திலேயே அந்த வெற்றி இருந்தது. வந்தவாசி தொகுதிக்கு ஸ்டாலின் பொறுப்பாளராக இருந்தார். அடுத்த மாதம் பென்னாகரத்துக்கு இடைத்தேர்தல் வருகிறது. அடுத்த ஆண்டோ அல்லது அதற்குள்ளாகவோ பொதுத் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தைச் சரிபாதியாகப் பிரிக்கும் பட்சத்தில் தன்னையும் கட்சியையும் பலப்படுத்தும் விருப்பத்தில் அழகிரி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு ஸ்டாலின் முதல்வர் ஆக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் அழகிரியின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் அவர்கள். இது குறித்து தமிழ் முரசு திமுகவினரிடம் கருத்து கேட்டது. 'சகோதரர்களுக்குள் பிளவு' என்ற அரசியல் பார்வையாளர்களின் கருத்தை அவர்கள் அறவே மறுத்தார்கள். அதிமுகவை எதிர்கொள்ள அழகிரி, ஸ்டாலின் சகோதரர்கள் தங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்தி வருவதாகவே அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

0 comments: