Monday, 11 January 2010

மக்கள் ஓட்டு வங்கியை நம்பி ஏமாந்த பா.மா.கா மற்றும் தே.தி.மு.கா அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு ஒரு அரசியல் சிறப்பு பார்வை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று இதுவரை வசனம் பேசி வந்த விஜயகாந்த், இப்போது கூட்டணிக்குத் தயார் எனக் கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் ஓரளவுக்கு வாக்கு வாங்கியும் அண்மைய இடைத் தேர்தல்களில் வைப்புத் தொகையை இழந்ததால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த், நேற்று தனது தேமுதிக கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தைத் திடீரென கூட்டினார். கட்சியினர் மத்தியில் சலிப்பும், தொண்டர்கள் வெளியேறுவதும் அதிகரித்துவிட்ட நிலையில் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜயகாந்த். எனினும் அதிமுக, திமுகவுடன் கூட்டு இல்லை என அறிவித்துள்ளார். ஆனால் தமிழக காங்கிரஸŸடன் விஜயகாந்தைச் சேர்க்கமாட்டேன் என அதன் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய விஜயகாந்த், தேமுதிகவுக்கு டிவி, பத்திரிகை இரண்டும் வருகிறது. அவை இரண்டும் வரும்போது விஜயகாந்த் யார், விஜயகாந்தின் தொண்டர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார். திமுக, அதிமுகவினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு நெடுநாள் தொடராது. மக்கள் ஒருநாள் விழித்தெழு வார்கள் என்றும் விஜயகாந்த் சொன்னார்.மேலும் பா.மா.கா நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறுவதாவது :- என்னோட கூட்டு சேருங்கன்னு சொன்னேன் யாரும் வர மாட்டேங்குறாங்கன்னு புலம்பும் ராமதாஸ் மேலும் சென்னை : ""பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளரை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்,'' என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்றார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பெண்ணாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் போட்டியிடுகிறார். பொதுவாக, இடைத்தேர்தல் தவிர்க்கப்பட வேண்டும். பொதுத்தேர்தலின் போது வெற்றி பெற்ற வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியே, இடைத்தேர்தலிலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற பா.ம.க.,வின் கருத்தை, எந்தவொரு அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.பணநாயகத்தை முறியடித்து, ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று விரும்புகிற கட்சிகள் அனைத்தும், பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். வேட்பாளரை அறிவித்து விட்டோம். எனவே, எங்களை ஆதரியுங்கள் என்ற அளவில் இந்த கோரிக்கையை நான் வைக்கவில்லை. இத்தொகுதியில், பா.ம.க.,வுக்கு உள்ள செல்வாக்கு அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளிடத்தில் ஆதரவு கேட்கிறோம்.பெரியண்ணன் இறந்த பின், பொது வேட்பாளராக யாரையாவது நிறுத்தலாம் என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதினேன். அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, தனித்து போட்டியிடுகிறோம். யாரையும் நான் சந்திக்கவில்லை.இவ்வாறு ராமதாஸ் கூறினார். இவர்கள் சொல்வது சரிதானா பிடித்து இருந்தால் பின்னோட்டம் இடுங்களேன்

3 comments:

Anonymous said...

ஒட ஒட விரட்டி அடிக்க வேண்டும், அதும் ராமதாஸை அரசியல் விட்டே ஒட ஒட விரட்ட வேண்டும்

இளங்கோ said...

விஜயகாந்த் பேச்சு “குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” கதையாக உள்ளது.
ராமதாஸ் தன்னை வன்னியர் என்று சொல்கிறார்;அப்புறம் நான் தமிழன் என்று சொல்கிறார்.எங்கே போய் முட்டிக் கொள்வது?

said...

சரியாக சொன்னீர்கள் இவர்களை நம்பியா ஒட்டு போடுவது