Thursday, 7 January 2010

திருப்பதியில் உண்டியலில் பணம் அதிக வரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் ஏராளமான பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் தனித்தெலங்கானா பிரச்னை காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், நேற்று குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர். மாநிலம் முழுவதும் பந்த் காரணமாக ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டம் நடந்தால், திருப்பதி நோக்கி வரும் பக்தர்கள் மிகவும் சிரமமடைந்தனர்.

இருப்பினும் நேற்று ரூ.300 கட்டணம் செலுத்தி 3,300 பேர் உட்பட பொது தரிசனம் மூலம் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோயில் உண்டியல் வருமானம் நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 20 லட்சம் பணம் உட்பட விலையுயர்ந்த தங்க, வைர நகைகள் காணிக்கை இருந்தன.

0 comments: