Thursday, 7 January 2010

திருட்டு வி.சி.டி. கமலஹாசன் கடும் எதிர்ப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் திருட்டு வி.சி.டி.யை முற்றிலும் ஒழிக்க முடியாது. படம் வெளியாகும்போதே சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், முறையான உரிமத்துடன் அந்தப் படத்தின் வி.சி.டி.க்களையும் விற்பனை செய்தால் ஓரளவுக்கு திருட்டு வி.சி.டி.யைத் தடுக்கலாம்.சாராயக் கடைகள் தாராளமாகத் திறந்திருக்கும்போதே கள்ளச்சாராயச் சாவுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. குறைந்த விலையில் வி.சி.டி.க்கள் விற்றால் மக்கள் வாங்கத்தான் செய்வார்கள்.

இதை மக்களுக்கு எப்படி உணர்த்துவது? திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? தேச விரோத செயல்களுக்குத்தான் இதுபோன்ற கருப்புப் பணம் உதவுகிறது. நல்ல காரியத்துக்குப் போய்ச்சேருவதில்லை. உங்கள் தலையில் விழும் குண்டுகள் தயாரிக்கத்தான் இந்தப் பணம் உதவுகிறது என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

"ஜக்குபாய்' திருட்டு வி.சி.டி. பிரச்னையில் இப்போது என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம். நம்முடைய வீட்டைப் பூட்ட மறந்துவிட்டு பொருள் தொலைந்துவிட்டது என புலம்பக் கூடாது. இந்தப் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும். அப்போதுதான் படம், பெரிய வெற்றிபெறும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்

0 comments: