இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாயில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலீஃபாவின் கட்டுமானப்பணியில் தமிழ் நிறுவனங்கள் மற்றும் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகரன், ராமன், கிருஷ்ணன், திருச்சியை சேர்ந்த அன்சாரி, சுரேஷ், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி என்பவரும் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மணி ஆகியோர் ஆவர். புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் முக்கிய கட்டிட ஒப்பந்தகாரர் எஸ்.பி.ஏ. என்றழைக்கப்படும் சாம்சங் பிசிக்ஸ் அரப்டெக் ( SAMSUNG BESIX ARABTEC JV ) எனும் கொரியன் மற்றும் அரபு கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான ஒப்பந்த நிறுவனங்கள் உண்டு. இவற்றில் தொழிலாளர்கள் முதல் மேலாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பிரதான நிறுவனமான EVH என்றழைக்கப்படும் ETA VOLTAS HITACHI -JV கூட்டு நிறுவனம் தான் MEP எனப்படும் மெக்கானிக்கல் மற்றும் எலட்ரிக்கல் பணிகளை செய்து வருகிறது. இந்த கூட்டு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடினமான பணிகளை செவ்வனே செய்து முடித்துள்ளனர். பணியில் ஈடுபட்ட தமிழர்கள் விபரம் வருமாறு: அன்சாரி,கன்ஸ்ட்ரக் ஷன் மேனேஜர் (திருச்சி),முஹம்மது ரஃபி, சீனியர் பிளம்பிங் டிசைன் என் ஜினியர் (பாபநாசம் - தஞ்சை), கிருஷ்ணமூர்த்தி, எலக்ட்ரிகல் கமிஷனிங் என் ஜினியர் (சென்னை) ,மணி, கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜர் (கன்னியாகுமரி), சந்திரசேகரன், கன்ஸ்ரக்ஷன் மேனேஜர் (சென்னை), ராமன், சீனியர் பயர் பைட்டிங் டிசைன் என் ஜினியர் (சென்னை). சுரேஸ், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் (திருச்சி), கிருஷ்ணன், அக்கவுண்ட்ஸ் டெபுடி மேனேஜர் (சென்னை), இக்கட்டிடம் மார்ச் 2005 ல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2010 ல் முடிக்கப்பட்டது. இதன் உயரம் 828 மீட்டர். இதில் 160 தளங்களும், அதன் மேல் மூன்று மூன்றடுக்கு தளங்களும் உள்ளன. இக்கட்டிடத்தில் 124 வது தளத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தளத்தை சென்றடைய 60 செகண்டுகள் தான் ஆகும் 154 வது தளத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. 3000 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. குழந்தைகளுக்கு பிரத்யோகமாக இரண்டு தளங்களைக் கொண்ட குழந்தைகள் பெவிலியன், விழாக்களைக் கொண்டாட தனி கட்டிட்டமாக ஃபங்ஷன் ஐலேண்ட், இக்கட்டிடட்த்தின் எல்லா இயந்திரங்களும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறும் முறையில் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் தமிழ் பொறியாளர்கள்,மேற்பார்வையாளர்களுடன், சதீஷ் தண்டிகர் (வோல்டாஸ் புராஜக்ட் டைரக்டர்), ஜார்ஜ் ஜோஸப் (ஈடிஏ புராஜக்ட் டைரக்டர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். தகவல் உதவி: பொறியாளர் முஹம்மது ரஃபி (தஞ்சை-பாபநாசம்)ஆதாரம் : சென்னை ஆண் லைன்
4 comments:
புதிய செய்தி...
நன்றி - வாழ்த்துக்கள்
திருநெல்வேலியை சேர்ந்த அமீரக பதிவர் நணபர் கண்ணாவும் இதன் கட்டுமான பணியில் இடம்பெற்றுள்ளார் என்பதை தெரிவிக்கிறேன்.
தகவலுக்க நன்றி. இந்தியன் மூளை இல்லாமல் ஏதாவது நாடு இருக்கிறதா என்ன?
தமிழர்கள் மொக்கையர்கள் அல்ல ...மிக கூரானவர்கள் என்று நீருபித்து கொண்டே வருகிறார்கள் ... பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றியும் வாழ்த்தும் ..... உங்களுக்கு என்றுமே பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள் ..
சிறப்பான , ஊக்கமான இடுகைக்கு நன்றியும் வாழ்த்தும் ...
Post a Comment